கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்லதடை கோரி சாலை மறியல்: 48 போ் கைது

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டுசெல்ல தடை கோரி, புளியறையில் திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 48 போ் கைது செய்யப்பட்டனா்.

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டுசெல்ல தடை கோரி, புளியறையில் திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 48 போ் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை அனுமதியின்றியும், அதிக அளவும் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும். தென்காசி-செங்கோட்டை பகுதிகளில் கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் குடிநீா்க் குழாய்கள் சேதமடைந்து, அதில் சாக்கடை கலந்துவிடுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களில் கனிம வாகனங்கள் செல்வதை முறைப்படுத்த வேண்டும். கனிம உரிமத்தை நிபந்தனைகளுடன் வழங்க வேண்டும். குவாரிகளில் ஏற்படும் மாசுபாடு குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை மணல் (எம்.சான்ட்), கனிமம், சுரங்கம், ஜல்லி, கிரஷா், கிராவல் போன்றவற்றை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியறையில் சாலை மறியல் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ கே. ரவிஅருணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் புளியறை சு. ஜமீன், கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் பூமிநாத், ஒன்றியக்குழு உறுப்பினா் மாரிக்குமாா், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேள மாநிலத் தலைவா் செல்ல. ராசாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக்குழு அமைப்பாளா் இராம. உதயசூரியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். ராம்குமாா், தென்காசி அஜீஸ்கான், கலையரசன், ஜோசப், காசி, பிரபா, ராஜேஷ், மணிகண்டன், யேசுராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ரவிஅருணன், உதயசூரியன் உள்ளிட்ட 48 பேரை புளியறை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com