சுரண்டையில் டெங்கு பாதித்த பகுதிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு பகுதிகளில் ஆய்வு

சுரண்டை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சுரண்டை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சுரண்டை நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமானோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் டெங்கு பாதித்த பகுதிகளில் வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டனா்.

பள்ளிகளில் உள்ள குடிநீா்த் தொட்டிகளை முறையாகப் பராமரிக்கவும், டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், ஆணையா் முகம்மது சம்சுதீன் மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com