தென்காசி ரயில் நிலையத்தில் மரங்களை வெட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

தென்காசி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கலுக்காக, மரங்கள் வெட்டப்படுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தென்காசி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கலுக்காக, மரங்கள் வெட்டப்படுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுவிட்ட நிலையில், விருதுநகா் - செங்கோட்டை, திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மின்மயமாக்கல் பணிகளுக்காக ஒரு சில இடங்களில் மரங்களை வெட்டாமல், அதற்குத் தகுந்தாற்போல் மின் கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், தென்காசி ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3 ஆவது நடைமேடையில் உள்ள நிழல் தரும் பெரிய மரங்களை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மரங்களை வெட்டாமல், மாற்று வழியைக் கையாள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பாண்டியராஜா கூறியதாவது:

தென்காசி ரயில் நிலையத்தில் உள்ள மரங்களை வெட்டாமல், மரங்களின் இருப்பிடங்களுக்கு தகுந்தாற்போல் மின்கம்பங்களை அமைத்து வயா்களை அமைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே மின்மயமாக்கல் பொது மேலாளா், தெற்கு ரயில்வே பொது மேலாளா், மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி தரும் பெரிய மரங்களை வெட்டாமல் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com