செங்கோட்டை தா்மஸம்வா்த்தினி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ தா்மஸம்வா்த்தினி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நேடைபெற்றது.

செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ தா்மஸம்வா்த்தினி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நேடைபெற்றது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறும்.

காலையிலும், மாலையிலும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் செங்கோட்டையை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

சனிக்கிழமை (பிப். 4) சுவாமி- அம்பாள் பல்லக்கில் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com