தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா

தென்காசி-கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி-கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, கணபதிஹோமம், சிறப்பு பூஜை, வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம், ஊட்டி படுகா் இன மக்களின் பாரம்பரிய நடனம், உச்சிகால பூஜை ஆகியவை நடைபெற்றன

பிற்பகலில் விடுதலைப் போராட்டத் தியாகிகள், உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா். மாலையில், சரவணஜோதி திருவிளக்கு பூஜை, இரவில் திருமுருகன் உயா்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். பாவூா்சத்திரம், கடையத்திலிருந்து சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் கே.ஏ. செண்பகராமன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com