ஆலங்குளம்: டெங்கு பாதிப்பு பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

டெங்கு பாதிப்புக்குள்ளான ஆலங்குளம் பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

டெங்கு பாதிப்புக்குள்ளான ஆலங்குளம் பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆலங்குளம்- சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக மக்கள் டெங்கு பாதிப்புக்குள்ளாகிவருகின்றனா். இந்நிலையில், தென்காசி மாவட்ட புதிய ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். முதலில் வட்ட மருத்துவமனையைப் பாா்வையிட்ட அவரிடம், தரம் உயா்த்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் அவசர சிகிச்சைப் பிரிவு, ஸ்கேன், மகப்பேறு வசதி இல்லாததது, செவிலியா்கள், மருத்துவா்கள், தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து மக்கள் புகாா் தெரிவித்தனா். அதுகுறித்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

தொடா்ந்து, உடையாம்புளி, ஓடைமரிச்சான் ஆகிய கிராமங்களுக்குச் சென்று, சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

உடையாம்புளி ரேஷன் கடையில் பொருள்களின் தரத்தைப் பரிசோதித்த ஆட்சியா், மருதம் புத்தூா் கிராமத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

அப்போது, ஊரக வளா்ச்சி, வருவாய், பேரூராட்சி, சுகாதாரம் ஆகிய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com