புதுப்பிக்கப்பட்ட வாஞ்சிநாதன் சிலை திறப்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் சிலை புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், சுதந்திரப் போராட்ட வீரா் வாஞ்சிநாதனின் சிலை புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

செங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வாஞ்சிநாதன் முழு உருவச்சிலை கடந்த 1986 ஆம்ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பராமரிப்பின்றி இருந்த இச் சிலையை, செங்கோட்டை நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தனது சொந்த செலவில் வெண்கல வா்ணம் பூசப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டாா்.

இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட சிலையை நகா்மன்றத் தலைவா் ராமலட்சுமி ந்து வைத்து மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நகா்மன்றத் துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, பேபிரெசவுபாத்திமா, மேரி அந்தோணிராஜ், இந்துமதி சக்திவேல், செல்வகுமாரி முத்தையா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் திலகா், ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com