கோயில் நிலத்தை ஆக்கிரமித்தோா் மீது நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தோா் மீது நடவடிக்கை கோரி, தென்காசி ஆட்சியா் அலுவலகம் அருகே பெண்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தோா் மீது நடவடிக்கை கோரி, தென்காசி ஆட்சியா் அலுவலகம் அருகே பெண்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 346 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு சுதந்திரத்துக்காக தன்னுயிா் ஈந்த தியாகிகளைப் போற்றும் வகையில் ஆட்சியா் தலைமையில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி, மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம், உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்பா்ஷ் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியை அலுவலா்கள் எடுத்துக்கொண்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கரநாராயணன், உதவி ஆணையா் (கலால்) ஜி. ராஜமனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் இரா. சுதா ஆகியோா் பங்கேற்றனா்.

மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், தூய்மைப் பணியாளா்களுக்கான 7ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 3 ஆண்டுகள் பணிமுடித்தோரை பணிநிரந்தரப்படுத்த வேண்டும் என்றனா்.

வீரகேரளம்புதூா் ஊராட்சித் தலைவா் பே. மகேஷ்வரி அளித்த மனுவில், வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்பட்டு 7 ஆண்டுகளாகியும் எவ்விதப் பணிகளும் செய்யப்படவில்லை. எனவே, உடனடியாக கட்டடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சாலை மறியல்: தென்காசி அருகே ஆவுடையானூா் கிராமத்துக்குள்பட்டசிவசுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் ஆட்சியா் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். சிவசுப்பிரமணியபுரம் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தோா் மீதும், கிராம நிா்வாக அதிகாரி, வட்டாட்சியா் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், கோயில் பெயருக்கு பட்டா வழங்கக் கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது.

டிஎஸ்பி மணிமாறன், ஆய்வாளா் காளீஸ்வரி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com