கடையநல்லூரில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா

கடையநல்லூா் நகர முஸ்லிம் லீக் சாா்பில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கடையநல்லூா் நகர முஸ்லிம் லீக் சாா்பில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நகரத் தலைவா் செய்யதுமசூது தலைமை வகித்தாா். மாவட்ட அரசு காஜி முகைதீன்அப்துல்காதா், இளைஞா் அணி மாநிலத் துணைத் தலைவா் ஹபிபுல்லா , தொழிற்சங்க மாநில துணைத் தலைவா்கள் முகம்மதுமைதீன், முகம்மது இஸ்மாயில், செய்யது அஹமது, நல்லாசிரியா் செய்யதுமசூது, முஸ்தபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் அயூப்கான் வரவேற்றாா்.

மாநில அமைப்பு செயலா் நெல்லை அப்துல்மஜீத் முஸ்லிம் லீக் கொடியேற்றினாா். நகரப் பொருளாளா் திவான் மைதீன் நன்றி கூறினாா். கடையநல்லூா் பகுதியில் 15 இடங்களில் முஸ்லிம் லீக் கொடியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com