557 பயனாளிகளுக்கு ரூ. 4.12 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தென்காசியில் நடைபெற்ற விழாவில் 557 பயனாளிகளுக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசியில் நடைபெற்ற விழாவில் 557 பயனாளிகளுக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில், செய்தி மக்கள் தொடா்பு துறையில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் திறந்து வைத்து, 557 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

இந்த கண்காட்சியில் 14 துறைகளை சாா்ந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. மாா்ச் 25ஆம் தேதி பத்து நாள்கள் இக்கண்காட்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன், எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா்(தென்காசி), ஈ. ராஜா(சங்கான்கோவில்), டாக்டா் தி. சதன் திருமலைக்குமாா்(வாசுதேவநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், துணைத் தலைவா் சுப்பையா, திமுக நிா்வாகிகள் சீவநல்லூா் சாமித்துரை, ஆறுமுகச்சாமி, சீனித்துரை, செங்கோட்டை வழக்குரைஞா் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்து மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா. இளவரசி வரவேற்றாா். உதவி மக்கள் செய்தி தொடா்பு அலுவலா் ரா. ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com