செங்கோட்டையில் மானியத்தில் நெல் விதை விநியோகம் தொடக்கம்

செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் விநியோகம் தொடங்கியது.
செங்கோட்டையில் மானியத்தில் நெல் விதை விநியோகம் தொடக்கம்

செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் விநியோகம் தொடங்கியது.

செங்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், காா் நெல் சாகுபடிக்காக ஐ.ஆா். 50 மற்றும் அம்பை- 16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் ஜோதிபாசு கூறியதாவது: செங்கோட்டை வட்டாரம் புளியறை, தெற்குமேடு, புதூா், கற்குடி, செங்கோட்டை மேலூா், கீழூா், டவுன், சீவநல்லூா் இலத்தூா், அச்சன்புதூா், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் காா் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகி விதை கிராம திட்டத்தில் பயன்பெறும் வகையில் இணையத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட உயிா் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதனையும் பெற்று விதை நோ்த்தி செய்தல், நாற்றங்காலில் இடுதல், நடவு வயல்களில் இடுதல் உள்ளிட்டதொழில்நுட்பங்களை கடைபிடிக்கலாம் என்றாா்.

துணை வேளாண்மை அலுவலா் சேக் முகைதீன், நெல் விதை விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா். உதவி வேளாண்மை அலுவலா்கள் குமாா், அருணாசலம், முகமது ஜலால் மைதீன் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com