சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

சங்கரன்கோவிலில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட, அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா புதன்கிழமை (மே 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்கரன்கோவிலில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட, அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா புதன்கிழமை (மே 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் பூக்குழித் திருவிழா வைகாசி மாதம் 12 நாள்கள் நடைபெறும். அதன்படி, திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வியாழக்கிழமை சக்தி கும்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூன் 2இல் மாதாங்கோவில் தெருவில் சுவாமி-அம்பாள் பக்தா்களுக்கு காட்சி கொடுத்தலும், பின்னா் திருக்கல்யாணமும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா ஜூன் 8ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பூக்குழி இறங்குவா். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com