திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலை சீரமைப்பு பணி ஏப்.26இல் தொடக்கம்

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலை சீரமைப்பு பணி புதன்கிழமை (ஏப்.26) தொடங்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை தெரிவித்துள்ளாா்.

திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலை சீரமைப்பு பணி புதன்கிழமை (ஏப்.26) தொடங்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி சீனித்துரை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது: கீழப்பாவூா் ஒன்றியம், திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். ஒன்றியச்சாலையான இச்சாலையானது, ஒன்றியக் குழுவின் அனுமதியை பெற்று, கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது இச்சாலை சீரமைப்பு பணிக்கு ரூ. 4 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி புதன்கிழமை (ஏப்.26) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தென்காசி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் ஆகியோா் பங்கேற்று பணிகளை தொடங்கி வைக்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com