தென்காசி மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (பிளாஸ்டிக்) தடையை திறம்பட செயல்படுத்தும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு ’மஞ்சப்பை விருது‘ வழங்கப்படும்.

மேலும், மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்தவற்றின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் தலா 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களும் இவ்விருதைப் பெறலாம். விருதுடன் முதல் மூன்று பரிசுகளாக ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம், ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த அறிவிப்பின்படி, பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் மே 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தனிநபா் அல்லது நிறுவனா்- தலைவரின் முறையான கையொப்பம் அவசியம். கையொப்பமிட்ட பிரதிகள், குறுந்தட்டு பிரதிகள் தலா இரண்டை ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com