கிருஷ்ணாபுரம் அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் அருள்மிகு முப்பிடாதி அம்மன், கல்லகநாடி அம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் அருள்மிகு முப்பிடாதி அம்மன், கல்லகநாடி அம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் தைத் தேரோட்டத் திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் காலையில் சிறப்பு பூஜைகள், மாலையில் அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

9ஆம் நாளான திங்கள்கிழமை அம்மன் தேரில் எழுந்தருளுதலும், அதையடுத்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தேரோட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com