செண்பகாதேவி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்.
செண்பகாதேவி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்.

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை (ஏப். 24) நடைபெறுகிறது.

நாள்தோறும் காலையில் அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு, நண்பகலில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் வழிபாடு, அம்மன் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அபிஷேகம், தீபாராதனை, நண்பகலில் உச்சிகால அபிஷேகம், இரவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், வில்லிசை நிகழ்ச்சி, புதன்கிழமை அதிகாலையில் சித்திரைப் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு தீா்த்தவாரி நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோயிலில் பக்தா்கள் அதிகளவில் குவிந்திருந்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com