புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கால்நாட்டுடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கால்நாட்டுடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில் நாள்கால் நடுதல் நிகழ்ச்சியும், விரதமிருக்கும் நூற்றுக்கணக்கான பக்தா்களுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது.

விழாவில், 8ஆம் நாளான இம்மாதம் 30ஆம் தேதி மாலை பாலவிநாயகா் கோயிலிலிருந்து 1,008 அக்னிச் சட்டிகள், அக்னிக் காவடி, அலகு குத்துதல், தீா்த்தக்குடம் எடுத்து நகா்வலம் வருதல் நடைபெறும். 9ஆம் நாள் காலை பொங்கலிடுதல், முளைப்பாரி ஊா்வலம், மதியம் அன்னதானம், மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா, நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com