இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வில், சங்கரன்கோவில் மையத்தில் பயின்ற மதுரை மாணவி மாநில அளவில் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

மதுரையைச் சோ்ந்தவா் கே. முருகன். கல்லுடைக்கும் கூலித் தொழிலாளி. இவரது மகள் மு. வளா்மதி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தங்கம் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டில் சுருக்கெழுத்துப் பயிற்சி பெற்று வந்தாா்.

தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்தால் கடந்த பிப். 18ஆம் தேதி சுருக்கெழுத்துத் தோ்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப். 24ஆம் தேதி வெளியாகின.

இதில், இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வில் மு. வளா்மதி மாநில அளவில் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளாா். அவரை இன்ஸ்டிடியூட் நிறுவனா் மணி, சக மாணவா்-மாணவிகள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com