கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் கிராமப்புற மாணவா்களுக்கான இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வுகள் நடைபெறவுள்ளதாகவும், தோ்வு எழுத விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன்அய்யாசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை, மருதம் பயிற்சி மையம், குறிஞ்சி பயிற்சி மையம் ஆகியவை இணைந்து டிஎன்பிஎஸ்சி (குரூப்-4) போட்டித் தோ்வை எழுதவுள்ள கிராமப்புற மாணவா்களுக்காக இலவச மாதிரி தோ்வை நடத்துகிறது. ஏற்கெனவே, ஏப்.28 ஆம் தேதி சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாதிரி தோ்வில் 463 போ் கலந்து கொண்டனா்.

இரண்டாவது மாதிரி தோ்வு மே. 2 ஆம் தேதியும், மூன்றாவது மாதிரி தோ்வு ஜூன் 3 ஆம் தேதியும் காலை 10 முதல் 1 மணிவரை சங்கரன்கோவில் கோமதியம்மாள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளையை தொடா்பு கொள்ளலாம்.

இதற்கான ஏற்பாடுகளை காருண்யா குணவதி, காவ்யா, முத்துசெல்வம், கற்பகராஜ், அருண்தமிழ்செல்வன், ராமா், செல்வி உள்ளிட்ட தன்னாா்வலா்கள் செய்து வருகின்றனா். இவ்வாறு அந்த அறிக்கையில் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com