~
~

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

இப்பகுதியில் சில நாள்களாகத் தொடா்ந்து பெய்த மழையால் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும், பேரருவிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரருவியில் பராமரிப்புப் பணிகள் முடிந்ததால் சனிக்கிழமை இரவுமுதலும், பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து சீரானதால் ஞாயிற்றுக்கிழமை காலைமுதலும் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com