பாளை.யில் நாளை தமிழறிஞர் கால்டுவெல் நினைவேந்தல்-கருத்தரங்கம்

தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவேந்தல்-கருத்தரங்கம், பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவேந்தல்-கருத்தரங்கம், பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
அயர்லாந்தில் 1814-இல் பிறந்த ராபர்ட் கால்டுவெல், திராவிட மொழிகள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைப் புரிந்தவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் தங்கி இருந்து தமிழ்ப் பணியாற்றினார். இவர் ஆங்கில மொழியில் உருவாக்கிய ஒப்பிலக்கணம் உலகப் புகழ் பெற்ற நூலாகும். திருநெல்வேலி திருமண்டல முதல் பேராயராகவும் இருந்தவர்.
இவரது நினைவேந்தல்-கருத்தரங்கம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆக.28ஆம் தேதி நடைபெறுகிறது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி திருமண்டலம், அவ்வை நுண்கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து இக் கருத்தரங்கை நடத்துகின்றன. இக் கருத்தரங்குக்கு ஓவியர் சந்ரு தலைமை வகிக்கிறார். பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் அ. ராமசாமி, வரலாற்றுத் துறை தலைவர் ராமசுப்பிரமணியன், சாராள் தக்கர் கல்லூரி செயலர் சாம்சன் பால்ராஜ், தூய யோவான் கல்லூரி செயலர் ஜார்ஜ் கோசல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருமண்டல தொடர்புத் துறை இயக்குநர் கிப்சன் ஜான்தாஸ் வரவேற்கிறார்.
இக்கருத்தரங்கத்தை பல்கலைக் கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தொடங்கி வைக்கிறார். தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்துரை வழங்குகிறார். இக் கருத்தரங்கில் கால்டுவெல் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் மார்பளவு சிலை வெளியிடப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் வெளியிட, இந்தியத் தொல்லியல் துறை ஆணையர் பா. அறவாழி பெற்றுக் கொள்கிறார். அ.சேவியர், எம்.எஸ்.தங்கம் எழுதிய கால்டுவெல் வாழ்வும், பணியும் என்ற நூலை பல்கலைக் கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com