10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்வில் தவறிய அனைத்து மாணவர்களும் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்வில் தவறிய அனைத்து மாணவர்களும் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக, ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்புப் பதிவை தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை இணையதள முகவரியான w‌w‌w.‌t‌n‌v‌e‌l​a‌i‌v​a​a‌i‌p‌p‌u.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளம் வாயிலாக பதிவுசெய்து கொள்ளாம். இந்த இணையத்தில் வேலைவாய்ப்புப் பதிவு செய்தல், புதுப்பித்தல், கூடுதல் கல்வியைப் பதிவு செய்தல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்புவோர் தங்களது மதிப்பெண் சான்று பெறும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக ஜூலை 26முதல் ஆகஸ்ட் 9வரை 15 நாளுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவைதவிர, ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம். பதிவுசெய்ய விரும்புவோர் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தை மதிப்பெண் சான்றுடன் இணைத்துப் பதிவு செய்ய வேண்டும். எனவே, பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் பெற வரும்போது இத்தகைய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும். மேலும், சிபிஎஸ்இ, மெட்ரிக் வழியில் படித்தோரும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com