புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தென்திருப்பதியான மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. திருநெல்வேலி நகரம் அருள்மிகு லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோயிலில் காலை சிறப்பு அபிஷேகம், திருவாராதனம், தீபாராதனை, இரவில் சாயரட்சை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. சன்னியாசி கிராமம் நெல்லை திருப்பதி கோயில், சி.என். கிராமத்திலுள்ள ராஜகோபாலசுவாமி கோயில்களில் இரவில் கருட சேவை நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி, காட்டுராமர் கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்: புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஸ்ரீவைகுண்டம், நத்தம், இரட்டைத் திருப்பதி, திருக்கோளூர், பெருங்குளம், ஆழ்வார்திருநகரி, திருப்புளியங்குடி, தென்திருப்பேரை (டச்சிங் வனத்திருப்பதி) பகுதிகளுக்கு இப்பேருந்து சென்றுவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் சனிக்கிழமைக்கான பேருந்து திருநெல்வேலியிலிருந்து இயக்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, இம்மாதம் 29, அக்டோபர் 6, 13ஆம் தேதிகளிலும் நவதிருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருநெல்வேலியிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இப்பேருந்து இரவில் மீண்டும் திருநெல்வேலியை அடையும். நபருக்கு ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என, போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com