செங்கோட்டை நூலகத்தில் குரூப்-4 இலவச மாதிரித் தேர்வு
செங்கோட்டை நூலக வாசகர் வட்டம், விழுதுகள் அறக்கட்டளை சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஆக. 11, 18, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு இலவச மாதிரித் தேர்வு நடைபெறும். 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் அகாதெமியும், 18ஆம் தேதி ஆகாஷ் அகாதெமியும், 24ஆம் தேதி சனிக்கிழமை வெற்றி அகாதெமியும் இணைந்து தேர்வுகளை நடத்துகின்றன.
தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி தொகுப்பு கையேடுகளும், தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெறும் 3 நபர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். எவ்வித கட்டணமும் கிடையாது. தேர்வு எழுதும் அனைத்து மாணவர், மாணவிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நூலகர் ராமசாமி கேட்டு கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு, 9486984369 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.