பாளை.யில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சீதாராம் யெச்சூரி,  ராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து

காஷ்மீரில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சீதாராம் யெச்சூரி,  ராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். சி.பி.எம்.எல். மாநில குழு உறுப்பினர் ரமேஷ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பெரும்படையார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், ஸ்ரீராம், துரை,மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.வரகுணன், கு.பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com