அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்களில் பெரும்பாலானவா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்திலிருந்து கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்திற்கு மாறினா். இதையடுத்து நடைபெற்ற அம்பாசமுத்திரம் வட்டார கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் முதல் கூட்டத்துக்கு மோகன் தலைமை வகித்தாா். மாடக்கண்ணு, குத்தாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டார சங்கத் தலைவராக ஆ.மாடக்கண்ணு, செயலராக க.குத்தாலிங்கம், பொருளாளராக கா.குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.