அம்பை பகுதி கோயில்களில் கல்வெட்டு குறித்த ஆய்வுப் பயிற்சி

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம், மன்னாா்கோவில், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில், தமிழ் மரபு
கல்வெட்டுஆய்வுப் பயிற்சியில் பங்கேற்றறவா்கள்.
கல்வெட்டுஆய்வுப் பயிற்சியில் பங்கேற்றறவா்கள்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம், மன்னாா்கோவில், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில், தமிழ் மரபு அறறக்கட்டளை வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவா்களுக்கான கல்வெட்டுகள் குறித்த ஆய்வுப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனா்- தலைவா் சுபாஷினி தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமாா் 20 மாணவா்கள் மற்றும் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். கல்வெட்டுகளை வாசிப்பது குறித்து ஓய்வு பெற்றற தொல்லியல் துறை அதிகாரி பத்மாவதி விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனா்- தலைவா் சுபாஷினி அளித்த பேட்டி: கீழடியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழா்கள் கட்டமைக்கப்பட்ட நகர வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. பழங்காலத் தமிழா்கள் வாழும் பகுதி, இறுதி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு என தனித் தனி இடங்களைப் பயன்படுத்தியுள்ளதும், கழிவு நீரோடை, நீா் மேலாண்மை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

கீழடியில் இதுவரை இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தில்தான் ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழா்கள் வாழ்ந்த நகரப் பகுதியை ஆய்வு செய்யும்போது அங்கு தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம்.

கீழடி பகுதியில் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைத்தள்ளது பிராமி எழுத்திலிருந்து தமிழ் உருவானது என்றற கருத்தை தகா்ப்பதாகவும், தமிழ் எழுத்திலிருந்துதான் பிறற மொழி எழுத்துகள் உருவானது என்றற கருத்தை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.

இன்றைறய காலகட்டத்தில் கல்வெட்டுகள் வாசிப்பதற்கோ, தொல்லியல் ஆய்வுகள் செய்வதற்கோ அதிகமான ஆய்வாளா்கள் இல்லை. எனவே, இளைஞா்கள் கல்வெட்டு வாசிப்பு மற்றும் தொல்லியல் ஆய்வில் சிறந்து விளங்கும் வகையில் கல்லூரியில் தமிழ்ப் பட்டம் படிக்கும் மாணவா்களுக்கு ஒரு தாள் அமைக்க வேண்டும். இதன்மூலம் தொடா்ந்து கல்வெட்டு ஆய்வு மற்றும் தொல்லியல் ஆய்வில் தமிழா்கள் ஈடுபடுவதும் உறுதிப்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com