நெல்லை குறுக்குத்துறை  சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேர்த் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. கொடியேற்றத்துக்குப் பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, நாள்தோறும் காலை 6.30, இரவு 7 மணிக்கு சுவாமி மலர் அலங்காரத்துடன் சப்பரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நடைபெறுதல் நடைபெறுகிறது.
கடந்த 9 ஆம் தேதி ஆறுமுகர் உருகு சட்டசேவையும், வெட்டிவேர் சப்பரத்தில் அருள்மிகு ஆறுமுகப்பெருமான் எழுந்தருளுதல், சிறப்பு நீராட்டு வழிபாடும் நடைபெற்றன. பின்னர், தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருநெல்வேலி மாநகருக்கு எழுந்தருளிய சுவாமிக்கு விலைமதிப்பு மிக்க வைரக் கிரீடம் சூட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மலர் அலங்காரத்துடன் சுவாமி தேரில் எழுந்தருளினார். "அரோகரா' முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வெள்ளிக்கிழமை (செப். 13) காலை தீர்த்தவாரி,  இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com