கூடங்குளம், செட்டிகுளத்தில் முதல்வர் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2019 08:26 AM | Last Updated : 04th April 2019 08:26 AM | அ+அ அ- |

கூடங்குளம், செட்டிகுளத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், கூடங்குளம் பகுதிக்கு தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்தி தரப்படும் என்றார். முன்னதாக, அ.தி.மு.க.ராதாபுரம் ஒன்றியச் செயலர் அந்தோணி அமலராஜா தலைமையில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் செளந்தர்ராஜன், முன்னாள் மாவட்டச் செயலர் நாராயணபெருமாள், முன்னாள் தொகுதிச் செயலர் பால்துரை, நான்குனேரி, ராதாபுரம் வேளாண் பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன், ராதாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மதன் உள்ளிட்டோர் முதல்வருக்கு வரவேற்பளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலர் எஸ்.பி.தமிழ்செல்வன் மற்றும் தே.மு.தி.க. , ச.ம.க. தொண்டர்கள் கலந்துகொண்டனர்.