மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
By DIN | Published On : 27th April 2019 07:55 AM | Last Updated : 27th April 2019 07:55 AM | அ+அ அ- |

புளியங்குடி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் தலைமையிலான போலீஸார் மலையடிக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள ஓடையில் இருந்து இருவர் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் அவர்கள் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பிவிட்டனராம். விசாரணையில் தப்பியோடியவர்கள் மலையடிக்குறிச்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பரதன் (33) மற்றும் கருத்தப்பாண்டியன் (30) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்தனர்.