பாளை.யில் முப்பெரும் விழா

பாளையங்கோட்டையில் விஸ்வகர்ம மகா ஜன சங்கம், இளைஞர் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் விஸ்வகர்ம மகா ஜன சங்கம், இளைஞர் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு எம். சுடலைமுத்து தலைமை வகித்தார். வி. அனந்தநாராயணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ். மாசானமுத்து அறிக்கை வாசித்தார். என். ராமகிருஷ்ணன் இறைவணக்கம் பாடினார்.
16 பேருக்கு விஸ்வ கலைமாமணி விருதும், 30 பேருக்கு விஸ்வஜோதி விருதும், பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்-மாணவிகள் 25 பேருக்கு கலைமகள் விருதும் வழங்கப்பட்டன. விருதுகளை பரசமய கோளரிநாத ஆதின புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.
நிர்வாகிகள் முருகமுரளிதரன், சங்கரன்குரு, சங்கரசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
விழாவில், திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டில் கொலையுண்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. 
எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ. 50 லட்சத்தில் மணிமண்டபம் கட்ட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, தமிழகத்தில் வசிக்கும் விஸ்வகர்ம சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடாக விஸ்வகர்ம சமுதாயத்துக்கு 3 சதவீதம் வழங்க வேண்டும். செப்டம்பர் 17இல் கொண்டாடப்படும் விஸ்வகர்ம ஜயந்தி விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். திருநெல்வேலியில் கொலையுண்ட மாரியம்மாளின் மகள்கள் 3 பேருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் ஏ. தங்கவேல் வரவேற்றார். விஸ்வகர்ம இளைஞர் பேரவை அமைப்பாளர் கே.சுடலை நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com