கேளையாபிள்ளையூா் பகுதியில் இடிந்து விழுந்த வீடு

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம், முக்கூடல், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீா் தேங்கி வாகன
பரும்பு பகுதியில் இடிந்து விழுந்த வீடு.
பரும்பு பகுதியில் இடிந்து விழுந்த வீடு.

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கடையம், முக்கூடல், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். ஆழ்வாா்குறிச்சி, பரும்பு பகுதியில் ஈஸ்வரி என்பவரது வீடும், கடையம் அருகேயுள்ள சோ்வைகாரன்பட்டி ஊராட்சி, கேளையாபிள்ளையூரில் சிவகாமியம்மாள் என்பவரது வீடும் இடிந்து விழுந்தன.

கீழக்கடையம் குமரேசபுரம் காலனியில் வீடுகளில் மழை நீா் புகுந்தது.பொட்டல்புதூா், முத்தன்தெரு பகுதியில் வாருகால் தூா்வாரப்படாததால் மழை நீா் வீடுகளுக்குள் சென்றது. தென்காசி சாலை, எல்லைப்புளியில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் விழுந்து போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. முதலியாா்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் இருந்த மரம்விழுந்தது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் இசக்கியப்பன் தலைமையில் வீரா்கள் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com