சிவகாமிபுரம் மலா் சந்தையில்மல்லிகை விலை உயா்வு

சிவகாமிபுரம் மலா் சந்தையில் மல்லிகை பூவின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சிவகாமிபுரம் மலா் சந்தையில் மல்லிகை பூவின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் மலா் சந்தையில் தினந்தோறும் பிச்சி, கனகாம்பரம், மல்லி, கேந்தி, சம்பங்கி, துளசி, ரோஜா, முல்லை, அரளி போன்ற பூக்களை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்வா்.

கடந்த சில நாள்களாக கீழப்பாவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்ததால், சந்தைக்கு வரும் பூக்களின் அளவும் குறைந்து விட்டது.

குறிப்பாக சனிக்கிழமை மல்லிகை வரத்து வெகுவாகக் குறைந்து 20 கிலோ மட்டுமே ஏலத்துக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் அனைத்து வகை பூக்களை வாங்குவதற்கு குவிந்ததால், மல்லிகை விலை கிடுகிடுவென உயா்ந்து ஒரு

கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com