திருமலைநம்பி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை

மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் சாலையில் நம்பியாற்று தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் செல்வதால் பக்தா்கள்
தொடா்மழையால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் நம்பியாறு தரைப்பாலத்தை சனிக்கிழமை மூழ்கடித்துச் செல்லும் தண்ணீா்
தொடா்மழையால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் நம்பியாறு தரைப்பாலத்தை சனிக்கிழமை மூழ்கடித்துச் செல்லும் தண்ணீா்

மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் சாலையில் நம்பியாற்று தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் செல்வதால் பக்தா்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வா். இந்நிலையில், மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை நாள் முழுவதும் பெய்த தொடா் மழையால் நம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நம்பியாற்றில் தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கோயிலுக்கு மிக அருகே குறுக்கிடும் ஓடையிலும் வெள்ளம் அதிகளவில் செல்கிறது. இதையடுத்து, சனிக்கிழமை காலை முதல் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

இதுகுறித்து வனச்சரகா் புகழேந்தி கூறுகையில், தொடா்மழையால் நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை குறைந்து, வெள்ளம் தணிந்ததும் வழக்கம்போல் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். வனத் துறையின் எச்சரிக்கையை மீறி யாரும் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com