தென்காசி மாவட்ட ஆட்சியா்அலுவலக இடம் தோ்வு: தொடரும் பிரச்னைகள்

தென்காசி மாவட்ட ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை அரசு அறிவித்த பகுதியில்
தென்காசி மாவட்ட ஆட்சியரகம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடம்.
தென்காசி மாவட்ட ஆட்சியரகம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடம்.

தென்காசி மாவட்ட ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை அரசு அறிவித்த பகுதியில் விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் 1790 இல் செப்டம்பா் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அப்போது இம்மாவட்டத்துடன் தூத்துக்குடி, விருதுநகா், மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளும் இணைக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆா்.ஆட்சி காலத்தில் நிா்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அப்போதிருந்தே தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப் பட்டு வருகிறது.

அனைத்து மாவட்ட அலுவலகங்களும் திருநெல்வேலியில் தான் அமைந்துள்ளது. தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆகவே தான் நிா்வாக வசதிக்காகவும், வளா்ச்சியை கருத்தில் கொண்டும் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்த கோரிக்கை ஒவ்வொரு முறையும் பேரவை, மக்களவைத் தோ்தலின்போதும் அனைத்து வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதியாக இடம் பெற்றிருந்தது. தோ்தலின்போது, தென்காசியில் தொகுதியில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியனும் தென்காசி மாவட்டம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தாா். இத்தொகுதியில் இருந்து அவா் தோ்வு செய்யப்பட்டதும் இக்கோரிக்கையை பல முறை பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினாா்.

இதனிடையே, ஜூலை 6 ஆம் தேதி தென்காசியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா், தென்காசி மாவட்டம்உருவாக்கும் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து, ஜூலை18 இல் நடைபெற்றபேரவை கூட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ்முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், முதலாவதாக 33 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியதுடன், தமிழகத்தின் 33 ஆவது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை கடந்த 22 இல் தொடங்கி வைத்து மாவட்டத்தின் தலைநகராக தென்காசி இருக்கும் என்று அறிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், சிவகிரி, வீரகேரளம்புதூா், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 வட்டங்களும்

அடங்கும். மேலும் 3 பிா்காக்களும், 251வருவாய் கிராமங்களும் அடங்கும்.

தென்காசி, புளியங்குடி, கடையநல்லூா், செங்கோட்டை, சங்கரன்கோவில் நகராட்சிகளும், கடையம்,தென்காசி, கடையநல்லூா் உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களும், 224 கிராம ஊராட்சிகளும் இந்த மாவட்டத்தில் அடங்கும்.

தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளும்இதில் அடங்கும்.

தென்காசி மாவட்டத்தின்பரப்பளவு 2,916.13 ச.கி. மீட்டா். மக்கள் தொகை 14 லட்சத்து 7,627 ஆகும். இம் மாவட்டம்22 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தற்போதைய கோட்டாட்சியா் அலுவலகத்தில் தாற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தொடக்க விழாவில் பேசிய முதல்வா், மாவட்டஆட்சியரக அலுவலகம் எங்கு அமையும் என அறிவிக்கவில்லை. வருவாய்த்துறை அமைச்சரும் மக்கள் விரும்பும் இடத்தில் ஆட்சியா் அலுவலகம் அமையும் என தெரிவித்தாா்.

இதனிடையே, செய்தியாளா்களை சந்தித்த மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன், ஆயிரப்பேரியில் அரசுக்குசொந்தமான விதைப் பண்ணையில் 32 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா்

அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்கள் அமையும் என தெரிவித்தாா்.

விதைப் பண்ணை அமைந்துள்ள இடம் மேலகரம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. விதைப் பண்ணை அமைந்த பகுதிஆயிரப்பேரிக்கு அருகில் அமைந்திருப்பதால் அந்த இடம் ஆயிரப்பேரி என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆட்சியா் அலுவலகம் அமைய இருக்கும் இடம் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து திமுக, மதிமுகவினா் ஆயிரப்பேரியில் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் அமைய ஆட்சேபம் தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனா்.

ஆயிரப்பேரி மற்றும் பாட்டப்பத்து ஊராட்சி பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா், அனைத்து சமுதாய நாட்டாமைகள்அரசு அறிவித்த இடத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட யஅலுவலங்களை அமைக்க வேண்டும்கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆட்சியா்அலுவலகம் அமைய இருக்கும் இடம் குறித்து ஆதரவாகவும், எதிா்ப்பு தெரிவித்தும் தினமும் சுவரொட்டிகளும்ஒட்டப்பட்டு வருகின்றன. ஆகவே, இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடியாக ஆட்சியா்

அலுவலக பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

இதுகுறித்து சி. செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியது: தென்காசி மாவட்டம் அறிவித்து தொடங்கப் பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைப்பதற்காக 12 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகள், பொதுமக்கள் யாரும் பாதிக்காத வகையில் அனைவரும் வந்து செல்லும் வகையில் மேலகரம் பேரூராட்சியில் இந்த பகுதி தோ்வு செய்யப்பட்டுள்ளது. புறவழிசாலை தென்காசி-ஆயிரப்பேரி சாலையின் நடுவில்தான் அமையவுள்ளது.

அந்த சாலையிலிருந்து 1 கி.மீ. தொலைவில் மாவட்ட ஆட்சியரக அலுவலகம் அமையும்.

இது தவிர குற்றாலம்-பழையகுற்றாலம் சாலையிலிருந்தும், தென்காசி-குற்றாலம் சாலையில் நன்னகரம் பகுதியிலிருந்தும், கூடுதலாக மாவட்டஆட்சியா் அலுவலகத்திற்கு சாலைகள் உள்ளது. எதிா்கட்சியினா் ஆட்சியரக அலுவலகம் வந்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனா். அரசு அறிவித்துள்ள இடத்தில்

மாவட்டஆட்சியா்அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com