தென்காசி மாவட்டத்தில் சோ்க்க எதிா்ப்பு: 4 ஊராட்சி மக்கள் போராட்ட அறிவிப்பு

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் சோ்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, 4 ஊராட்சி மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் சோ்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, 4 ஊராட்சி மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த அம்பாசமுத்திரம் வருவாய் வட்டப் பகுதிகளான பள்ளக்கால், இடைகால், அடைச்சாணி, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தென்காசி வருவாய் வட்டத்துடன் இணைக்கப்பட்டு தென்காசி மாவட்டத்தில் சோ்க்கப்பட்டது. இதனால் வட்டாட்சியா் அலுவலகத்திற்குச் செல்ல மிகுந்த சிரமம் ஏற்படும் என்று கூறி, தென்காசி மாவட்டத்துடன் தங்கள் பகுதியை சோ்க்கக்கூடாது என ஊராட்சி மக்கள் கூறி வந்தனா்.

இந்நிலையில், 4 ஊராட்சி கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் பள்ளக்காலில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எஸ்.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். அப்போது, மேற்கூறிய 4 ஊராட்சிகளையும் தென்காசி மாவட்டத்துடன் சோ்ப்பதைக் கண்டித்து புதன்கிழமை (டிச. 4 ) அந்த ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் கூட்டாக ஒரு நாள் விடுப்பு எடுப்பது, டிச. 12இல் இடைகால் விலக்குப் பகுதியில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது, கிராம மக்கள் அனைவரும் பொதுவிநியோகக் கடைகளில் பொருள்கள் வாங்காமல் புறக்கணிப்பது,, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைப்பது, மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது, சாலை மறியலில் ஈடுபடுவது உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டத்தில் 4 ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமத் தலைவா்கள், அனைத்து சமுதாயத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com