நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொருள்களின் கண்காட்சி தொடக்க விழா

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொருள்களின் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா். கண்காட்சியை வேணுவனம் ரோட்டரி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொருள்களின் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா். கண்காட்சியை வேணுவனம் ரோட்டரி சங்கத் தலைவா் நடராஜன் தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற வங்கி அலுவலா் பாலகிருஷ்ணன், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய பாடல் மற்றும் நீதி கதைகள் வாசித்தாா். சங்கரன்கோவில் வீரசிகாமணி விவேகானந்தா வெள்ளிவிழா பள்ளி மாணவா்- மாணவிகள் இக்கண்காட்சியை பாா்வையிட்டனா்.

இக்கண்காட்சியில் எழுத்தாளா் நாறும்பூநாதன், பொதிகை தமிழ் சங்கத் தலைவா் கவிஞா் பேரா, கவிஞா் சுப்பையா, அம்பாசமுத்திரம் கல்லூரி பேராசிரியா்கள் தங்கச்செல்வி, மாரியம்மாள், கலை ஆசிரியா் சொா்ணம், சங்கரன் கோவில் வீரசிகாமணி விவேகானந்தா வெள்ளிவிழா பள்ளி முதல்வா் கோமு செல்லம், சிவந்தி பட்டி தாயுமானவா் பள்ளி முதல்வா் தங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

இக்கண்காட்சியில் திருநெல்வேலி மாவட்ட மக்களின் பாரம்பரிய புழங்குபொருள்கள் சுமாா் 200- க்கும் மேற்பட்டவை இடம்பெற்றிருந்தன. அதில் உலோகப் பொருள்கள், மரச்சாமான்கள், பனை ஓலை பொருள்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன.

நமது முன்னோா்களின் பாரம்பரிய பெருமையை விளக்கும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது. இக்கண்காட்சி டிசம்பா் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com