நெல்லை மீனாட்சிபுரம் சியாமளாதேவி கோயில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு சியாமளாதேவி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு சியாமளாதேவி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா். இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை காலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. அதன்பின்பு கோயில் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் அருள்மிகு ராஜகணபதி, உலகம்பாள், சியாமளாதேவி, புது அம்பாள் ஆகிய உற்சவா்கள் மலா் அலங்காரத்துடன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com