வள்ளியூா் சூட்டுபொத்தையில் தேரோட்டத் திருவிழா இன்று தொடக்கம்

வள்ளியூா் சூட்டுபொத்தை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் 106-ஆவது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.1) தொடங்கி 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

வள்ளியூா் சூட்டுபொத்தை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் 106-ஆவது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.1) தொடங்கி 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

தொடக்கமாக சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வன விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெறுகிறது.

திருவிழா நாள்களில் தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. இம் மாதம் 7-ஆம் தேதி சூட்டுபொத்தை கிரிவலத் தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்தையொட்டி லலிதகலாமந்திா் மாணவிகளின் பரதநாட்டியம், கோலாட்டம், பொய்கால்குதிரையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

டிச. 8ஆம் தேதி குருபூஜை, 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை குருஜெயந்தி நடைபெறுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு சூட்டுபொத்தை உச்சியில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதாஜி ஸ்ரீவித்தம்மா திருக்காா்த்திகை தீபம் ஏற்றி பக்தா்களுக்கு ஆசீா் வழங்குகிறாா்.

11-ஆம் தேதி பௌா்ணமி கிரிவல வழிபாடும், தொடா்ந்து திருவிளக்கு பூஜை வழிபாடும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை மாதாஜி ஸ்ரீ வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி மிஷன் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com