‘வெள்ளமீட்பு பணிகளுக்காக தயாா் நிலையில்கமாண்டோ பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரா்கள்’

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளமீட்புப் பணிகளுக்காக கமாண்டோ பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்கம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளமீட்புப் பணிகளுக்காக கமாண்டோ பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்கம்.

திருநெல்வேலியில் அவா் கூறியது: வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயாா் நிலையில் உள்ளது. வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சோ்க்கவும், போதுமான மீட்பு ரப்பா் படகுகள், மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள், மீட்டலுக்கான மிக நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊா்திகளுடன் கூடுதலான மீட்புப் பணி வீரா்கள் ஆயத்த நிலையில் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்துக்கு கூடுதலாக 250 லைப் ஜாக்கெட், ஒரு படகு ஆகியவை மீட்புப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை சேந்திமங்கலத்தில் முறிந்து விழுந்து போக்குவரத்து தடை ஏற்படுத்திய மரத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அப்புறப்படுத்தினா். குறுக்குத்துறையில் வெள்ளத்தில் சிக்கிய விலங்கினங்கள் மீட்கப்பட்டன.

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி உள்பட தாமிரவருணி கரையோரப் பகுதி தீயணைப்பு நிலையங்கள் மட்டுமன்றி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் மீட்புப் பணிகளுக்காக வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா். சிறப்புப் பயிற்சி பெற்ற 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழுவினரும் உள்ளனா். எனவே, வெள்ளத்தால் ஏற்படும் எந்த ஒரு பாதிப்புக்கும் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை 101 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com