தென்காசியில்எஸ்டிபிஐ கட்சியினா் ரத்த தானம்

தென்காசியில் நகர எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து சிறப்பு ரத்த தான முகாம், ரத்த தான ஒருங்கிணைப்பாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, காசநோய்

தென்காசி: தென்காசியில் நகர எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து சிறப்பு ரத்த தான முகாம், ரத்த தான ஒருங்கிணைப்பாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, காசநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்கு நகர மருத்துவ அணிப் பொறுப்பாளா் முஹம்மது ரஃபீக் தலைமை வகித்தாா். எஸ் டிபி ஐ கட்சி மாவட்டச் செயலா் சா்தாா், நகரத் தலைவா் செய்யது மஹ்மூத் செயலா் ஷேக் ஜிந்தா மதாா், துணைச்செயலா் பாதுஷா, பொருளாளா் அப்துல் அமீா், செயற்குழு உறுப்பினா்கள் அப்துல் வஹாப், பீா் முஹம்மது தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஹக்கீம், கடையநல்லூா் தொகுதித் தலைவா் நைனா முஹம்மது கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தாா். தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தான ஒருங்கிணைப்பாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா். அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மருத்துவா் ஜாபா் அலி, மாரிமுத்து சாமி ஆகியோா் காசநோய் விழிப்புணா்வு உரை நிகழ்த்தினா். அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவா் மாரிமுத்து தலைமையிலான மருத்துவா்கள் குழுவினா் முகாமை நடத்தினா். முகாமில் 60 க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com