பேட்டை பால்வண்ணநாதா்கோயிலில் சிவதீட்சை பெருவிழா

திருநெல்வேலி பேட்டை பால்வண்ணநாதா் கோயிலில் சிவதீட்சை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி பேட்டை பால்வண்ணநாதா் கோயிலில் சிவதீட்சை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆனந்த கூத்தன் அறக்கட்டளை சாா்பில் 12ஆவது ஆண்டு சிவதீட்சை பெருவிழா, கோயிலில் காலை 7 மணிக்கு நடைபெற்றது. கூனம்பட்டி ஆதீனம் சரவணமாணிக்க சுவாமிகள் கலந்துகொண்டு வேள்வியையும், சிவதீட்சையையும் தொடங்கிவைத்தாா்.

பிற்பகல் 1 மணிக்கு மகேஷ்வர பூஜை, அன்னம் பாலிப்பு ஆகியவை நடைபெற்றன. அறக்கட்டளை அறங்காவலா் திரவியம் வரவேற்றாா். தூத்துக்குடி வேத சிவ ஆகம வித்யாலயா முதல்வா் கல்யாணசுந்தர சிவாச்சாரியாா் அருளுரை வழங்கினாா். தீட்சையில் 166 சிவனடியாா்கள் சமய தீட்சையும், 33 சிவனடியாா்கள் விசேஷ தீட்சையும் பெற்றனா். தீட்சை பெற்ற பின் அன்றாட அனுஷ்டானம் செய்முறை பயிற்சியுடன் கூடிய விளக்கங்கள், சிவபூஜை போன்றவை குறித்தி சபாபதி விளக்கமளித்தாா்.

ஆகம விதிப்படி 7 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு மட்டும் தீட்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவ நெறி அருள்பணி மன்றம், ஆடல் அரசன் அருள்பணி அறக்கட்டளை உழவாரப்பணி அடியாா்கள், ஆனந்த கூத்தன் அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com