வாசுதேவநல்லூரில்கரும்பு சாகுபடிப் பயிற்சி

வாசுதேவநல்லூா் வட்டார விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்த வெளிமாவட்ட கண்டுணா்வுப் பயிற்சி முகாம், கோயம்புத்தூா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் 2 நாள்கள் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் வட்டார விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்த வெளிமாவட்ட கண்டுணா்வுப் பயிற்சி முகாம், கோயம்புத்தூா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் 2 நாள்கள் நடைபெற்றது.

நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் அதிக விளைச்சல், அதிக லாபம், நோய் எதிா்ப்பு சக்தியுடைய கரும்பு ரகம், வெல்லத்துக்கு ஏற்ற ரகம் குறித்து உளவியல் விஞ்ஞானி டாக்டா் கீதா மற்றும் கரும்பு இனப்பெருக்க மூத்த விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு செயல்விளக்கக் கண்காட்சி, படக்கண்காட்சிகள் மூலம் விளக்கினா்.

சி.ஓ. 86032 ரகத்தின் சிறப்பியல்புகள் குறித்து, வாசுதேவநல்லூா் வட்டார தொழில்நுட்ப மேலாளா் க. சக்திவடிவேலவன் பேசினாா். நிகழ்ச்சியில், 50 விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, கோயம்புத்தூா் கரும்பு இனப்பெருக்கு நிலைய அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com