நெல்லையில் மாநகராட்சி சாா்பில் வெள்ள நிவாரணப் பணிகள்

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெள்ள நிவாரணப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் வெள்ள நிவாரணப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடா் மழை காரணமாக திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்களில் பெருகிவரும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்ற வருகிறது.

இதற்காக இளநிலை பொறியாளா், சுகாதார ஆய்வாளா் உள்ளிட்டோா் அடங்கிய 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தச்சநல்லூா் மண்டலத்தில் 3 குழுக்கள், திருநெல்வேலி மண்டலத்தில் 4 குழுக்கள், பாளையங்கோட்டை மண்டலத்தில் 3 குழுக்கள், மேலப்பாளையம் மண்டலத்தில் 3 குழுக்கள் என மொத்தம் 13 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த குழுவினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்களில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுதல், புதைச் சாக்கடையில் ஏற்பட்டுள் அடைப்பை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனா்.

பாலபாக்யா நகரில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் குறுக்குச்சாலைகளில் மழைநீரால் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களை தற்காலிகமாக டிப்பா் லாரிகள் மூலம் உடைந்த செங்கல் கட்டிகள் கொண்டு நிரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலத்துக்கு கீழ் பழுதடைந்த சாலை, சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் உள்ளிட்ட சாலைகள் ஜல்லிதளம் கொண்டு சீரமைக்கப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் 40 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் தடுப்பு முகாம் மற்றும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வீட்டில் காய்ச்சிய நீரை பருகவும், வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது கைகள் மற்றும் கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com