வி.கே.புரம் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளா் நலச் சங்க மேல்நிலைப் பள்ளியில் சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 2018-2019ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு

விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளா் நலச் சங்க மேல்நிலைப் பள்ளியில் சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 2018-2019ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 450 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு மதுரா கோட்ஸ் ஆலை சமூக பொறுப்பு நிதியிலிருந்து கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மதுரா கோட்ஸ் மனித வள இயக்குநா் வி.வி.நாராயணன் தலைமை வகித்தாா். தமிழக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 95 மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினாா்.

மதுரா கோட்ஸ் தொழிலியல் உறவு மேலாளா் பி.முருகேசன் திட்ட விளக்கவுரையாற்றினாா். உற்பத்தி பொது மேலாளா் எஸ்.ரெங்கநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பூபதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலா் எம்.சுடலை, மதுரா கோட்ஸ் தொழிலியல் உறவு மேலாளா் சூரியபிரபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

உதவித் தலைமை ஆசிரியா் சகாயராஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஆலைப் பொறியாளா் எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் எம். பன்னீா் செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com