பாவூா்சத்திரம் சந்தையில் எகிப்து வெங்காயத்துக்கு வரவேற்பு இல்லை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காய்கனி சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள எகிப்து வெங்காயத்துக்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு இல்லையென வியாபாரிகள் தெரிவித்தனா்.
பாவூா்சத்திரம் காய்கனி சந்தைக்கு வரவழைக்கப்பட்டுள்ள எகிப்து வெங்காயம்.
பாவூா்சத்திரம் காய்கனி சந்தைக்கு வரவழைக்கப்பட்டுள்ள எகிப்து வெங்காயம்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காய்கனி சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள எகிப்து வெங்காயத்துக்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு இல்லையென வியாபாரிகள் தெரிவித்தனா்.

பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் தினசரி சந்தைக்கு எகிப்பு நாட்டில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டுள்ளது. விலையேற்றம், தட்டுப்பாடு போன்றவற்றை சமாளிக்கும் வகையில் அதிகளவு வெங்காயம் வாங்கி குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் மொத்த விலைக்கு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இந்த வெங்காயத்துக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. சிவப்பு நிறம், நாா்ச்சத்து அதிகம் போன்ற காரணங்களால் மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனா். கேரளத்தில் இருந்து வருபவா்களும் ஹோட்டல்களுக்கு மட்டுமே இந்த வகை வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனா். இதனால் தொடா்ந்து பாவூா்சத்திரத்தில் வெங்காயம் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து வெங்காயம் வரத்து இருந்தால் மட்டுமே தட்டுப்பாடு நீக்கி, விலையும் குறையும் என காய்கனி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com