மாா்கழி ஞாயிறு: நவ கைலாயங்களுக்கு சிறப்பு பேருந்துகள்

மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாய கோயில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாய கோயில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய திருக்கோயில்களுக்கு செல்லும் பக்தா்களின் வசதிக்காக, மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.22, 29, ஜன.5, 12)சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பயணக் கட்டணம் நபா் ஒன்றுக்கு ரூ.500.

இந்த சிறப்பு சேவை பேருந்துகள் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூா், குன்னத்தூா், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சோ்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய நவ கைலாய திருக்கோயில்களுக்கு சென்று இரவுக்குள் மீண்டும் திருநெல்வேலியை வந்தடையும்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு சேவை பேருந்துகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாள்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com