நெல்லையில் இளைஞர் வெட்டிப் படுகொலை

திருநெல்வேலியில் இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று ஞாயிற்றுக்கிழமை வெட்டிப் படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் இளைஞர் வெட்டிப் படுகொலை

திருநெல்வேலியில் இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி ஞாயிற்றுக்கிழமை வெட்டிப் படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி பழையபேட்டை அருகேயுள்ள கரையடி பச்சேரி பகுதியைச் சேர்ந்த சகாதேவன் மகன் இசக்கிமுத்து என்ற கணேஷ் பாண்டியன் (26). கூலித்தொழிலாளியான இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கணேஷ் பாண்டியன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் தனது வீட்டில் இருந்து வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலையில் கணேஷ் பாண்டியன் டீ குடிப்பதற்காக வெளியே சென்றபோது, அவரை ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் திடீரென வழிமறித்து தாக்கத் தொடங்கியுள்ளது.

அங்கிருந்து கணேஷ் பாண்டியன் தப்பியோட முயன்ற நிலையில், அந்தக் கும்பல் தொடர்ந்து விரட்டிச் சென்று திருநெல்வேலி - தென்காசி பிரதான சாலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கணேஷ் பாண்டியனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் பேட்டை போலீஸார் அங்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்ததில், அந்த மர்ம கும்பலில் தொடர்புடைய நான்குனேரி பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணேஷ் பாண்டியன் வழக்கமாக டீ குடிக்க வரும் கடையை கண்காணித்த மர்ம கும்பல், அங்கிருந்த ஒரு கோயில் அருகே காவி உடையணிந்தபடி காத்திருந்துள்ளனர். அவர்களது உடை காரணமாக அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் வராத நிலையில், திடீரென ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கணேஷ் பாண்டியனுக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

சமுதாயப் பிரச்னை காரணமாக இப்படுகொலைச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், பழையபேட்டை, கண்டிகைப்பேரி, கரையடிபச்சேரி பகுதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com