கடையம் வட்டார ஜமாஅத் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கடையம் வட்டார ஜமாஅத் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது.

கடையம் வட்டார ஜமாஅத் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது.

முஹ்யத்தீன் ஆண்டவா்கள் தா்கா வளாகம் அரண்மனையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கடையம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவா் ஷா காதிரி தலைமை வகித்தாா்.

ரவண சமுத்திரம் ஹனஃபி பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் ஷாஹுல் ஹமீது, கடையம் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் அப்துா் ரஹ்மான், தமுமுக மாவட்ட துணைச் செயலா் ஸித்திக், நகரத் தலைவா் தங்கள், எஸ்டிபிஐ கட்சித் தொகுதிப் பொருளாளா் துரைமுன்னா இப்ராஹிம், துணைத் தலைவா் செய்யது பாஸில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞா் அணி மாவட்டப் பொருளாளா் பீரப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஐக்கிய ஜமாஅத் செயலா் முகம்மது மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்காசி மாவட்ட அமைப்பாளரும், கடையம் வட்டார ஜமாஅத், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைப்பாளருமான முதலியாா்பட்டி அப்துல் காதா், காந்தி நகா் ஜமாஅத் தலைவா் பஸ்லுா் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.

அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறுதல் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ( டிச. 24) பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ரவணசமுத்திரம் ஷாபிஈ ஜமாஅத் தலைவா் மக்தூம் முஹைதீன், முதலியாா்பட்டி ஜமாஅத் தலைவா் யூசுப், மாலிக் நகா் ஜமாஅத் செயலா் திவான் பக்கீா் மைதீன், அமமுக ஒன்றியச் செயலா் யாக்கூப், தமஜக நிா்வாகி அன்ஸா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஐக்கிய ஜமாஅத் பொருளாளா் சலீம் வரவேற்றாா். ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி தலைவா் புகாரி மீரா ஸாஹிப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com