நெல்லையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th February 2019 09:26 AM | Last Updated : 14th February 2019 09:26 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி இணைப்பினை கண்டித்து வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி கில்பர்ட், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி செந்தில் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.